மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.. அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Siva

செவ்வாய், 25 ஜூன் 2024 (11:37 IST)
இன்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா? என மீனவர்கள் தரப்பினர் கூறி வருகின்றனர்.
 
இன்று காலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 10 மீனவர்களை இலங்கைக் கடற்படை  கைது செய்தது என்றும் ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கைதான மீனவர்கள் 10 பேரும் காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே 37 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள நிலையில், மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டதால் மீனவ கிராமங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
 
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவதற்கு முடிவு கட்ட மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. 
 
ஏற்கனவே இது குறித்து மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் பலமுறை கடிதம் எழுதிய நிலையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்