இன்று சென்னை வருகிறார் ஆளுனர்: பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா?

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (06:36 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டதாக தினகரன் அணியினர்களும் திமுகவும் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் இன்று தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகிறார்.



 
 
ஏற்கனவே இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தமிழக ஆளுனர் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். நீதிமன்றம் உத்தரவிடும் முன்பே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுனர் உத்தரவிடுவாரா? அல்லது நீதிமன்றத்தில் தனது தரப்பு நியாயங்களை விளக்குவாரா? என்பது குறித்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஒருவேளை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுனர் உத்தரவிட்டால் கர்நாடக மாநிலத்தில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உடனடியாக சென்னை திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்