இன்று இரவும் கொட்டப்போகுது மழை.. 7 மாவட்ட பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (16:20 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மிக கனமழை பெய்து வருவதால்  நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. 
 
இந்த நிலையில் இன்றும் 7 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் தீவிரமடைந்துள்ளதை அடுத்து மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், நாமக்கல்  ஆகிய ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் 
 
அது மட்டும் இன்றி புதுச்சேரி பகுதிகளிலும் ஒரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் இடி மின்னலடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது 
 
மொத்தத்தில் இன்றும் 7 மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதால் மேற்கண்ட ஏழு மாவட்ட பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்