வடமேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை..!

செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (10:38 IST)
அடுத்த 24 மணி நேரத்தில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதன் காரணமாக  அடுத்த 24 மணி நேரத்தில்  தமிழகம் உட்பட பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
வடவேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தோன்றும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடைப்பு சுழற்சி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகிறது என்றும் இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
எனவே சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்