காஞ்சிபுரத்தில் கனமழை.. விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் மக்களுக்கு சிக்கல்..!

திங்கள், 18 செப்டம்பர் 2023 (16:55 IST)
காஞ்சிபுரத்தில் தற்போது கனமழை பெய்து வருவதை அடுத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பொது மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இன்று மதியத்திற்கு மேல் தான் விநாயகர் சதுர்த்தி தொடங்குவதால் மாலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட மக்கள் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் திடீரென காஞ்சிபுரம் பகுதியில் தற்போது கன மழை பெய்து வருவதால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட முடியாமல் மக்கள் சிக்கலில் உள்ளதாக தெரிகிறது. மேலும் விநாயகர் கோவிலுக்கும் மழை காரணமாக செல்ல முடியாத நிலை உள்ளது. 
 
ஏற்கனவே சென்னை உள்பட ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இன்று மாலை முதல் இரவு வரை என் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
எனவே மக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி விநாயகரை வழிபடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்