சென்னையில் கடந்த 113 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் இன்றும் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஆனால் மார்ச் 7ஆம் தேதி ஐந்து மாநில தேர்தல் முடிவடைவதால் மார்ச் 8ஆம் தேதி குறைந்தபட்சம் 10 ரூபாயும் அதிகபட்சம் 20 ரூபாயும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் தேர்தல் காரணமாக மட்டுமே இந்தியாவில் பெட்ரோல் விலை உயரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என்றும் இன்று சென்னையில் டீசல் விலை ரூபாய் 91.43 என்றும் விற்பனையாகி வருகிறது