தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிளஸ் டூ தேர்வுகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் முக்கிய பாடங்களுக்கு மட்டுமாவது பிளஸ் டூ தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது
இன்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தலைமையில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மற்றும் கல்வி செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
மொழித்தேர்வுகள் இல்லாமல் முக்கிய பாடங்களுக்கு மட்டுமாவது பிளஸ் டூ தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் உயர்கல்வி கற்பதற்கு மாணவர்களுக்கு மிக முக்கியம் பிளஸ் டூ தேர்வின் மதிப்பெண்கள் என்றும் அதனால் பிளஸ் டூ தேர்வு நடத்தியே தீருவது என்ற முடிவில் மத்திய அரசு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
தேபோல் நீட் மற்றும் ஜே.ஈ.ஈ போன்ற நுழைவு தேர்வுகள் நடத்தவும் இன்று ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இன்றைய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் பிளஸ் டூ தேர்வு நடத்தப்படுமா? நடத்தப்படும் என்றால் எப்போது நடத்தப்படும்? என்பது குறித்த தகவல் வெளிவரும் என்று கூறப்படுகிறது