தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை: ஓரிரு இடங்களில் 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும்; வானிலை அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (09:38 IST)
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் ஓரிரு இடங்களில் இயல்பை விட இரண்டு டிகிரி அதிகமாக வெப்பநிலை இருக்கும் என்றும் வானிலை அறிவிப்பு தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக தமிழகத்தில் உள்ள உள் மாவட்டங்களில் சில இடங்களில் ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை அறிவிப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 11, 12 ஆம் தேதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் வழக்கத்தை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இன்று வெப்பநிலை இருக்கக்கூடும்

மேலும்  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்