இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்கு திசைக்காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால், ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் . வரும் ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு பகுதிகளில லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.