டி.என்.பி.எஸ்.சி குரூப் 7ஏ தேர்வு.. ஹால் டிக்கெட் பெறுவது எப்படி?

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (07:18 IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 7 தேர்வுக்கு ஹால் டிக்கெட் பெறுவது எப்படி என்பது குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:

ஜனவரி 6ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் அதன் பின்னர் ஜனவரி 7ஆம் தேதி முற்பகல் நடைபெற உள்ள குரூப் 7 பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை ஒன்று பதவிக்கான எழுத்து தேர்வு  நடைபெற உள்ளது.

அதேபோல் தமிழ்நாடு அறநிலையத்துறையின் பதவிக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 6ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல்  மற்றும் ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

 
மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் ஹால்டிக்கெட்டுக்கள்  தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in   www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய  விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்