தடுப்பூசி போடாவிட்டால் துறைரீதியான நடவடிக்கை! – ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (08:47 IST)
போக்குவரத்து பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த சில மாதங்களாக துரிதமாக நடந்து வருகிறது. தற்போது ஒமிக்ரான் பரவல் காரணமாக தடுப்பூசி செலுத்துவது அனைத்து துறைகளிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழக போக்குவரத்து துறை புதிய சுற்றறிக்கையை பணியாளர்களுக்காக அனுப்பியுள்ளது.

அதில், தமிழக போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஊழியர்கள் தங்கள் தடுப்பூசி சான்றிதழை மாவட்ட அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்