சிறுவர்களுக்கு கோவாக்சின் மட்டுமே செலுத்தப்படும்: மத்திய அரசு

திங்கள், 27 டிசம்பர் 2021 (07:50 IST)
ஜனவரி 3 முதல் 15 முதல் 18 வயதான சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் 15 முதல் 18 வயதான சிறுவர்களுக்கு எந்த வகையான தடுப்பூசி போடப்படும் என கேள்வி எழுந்த நிலையில் தற்போது இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
 
15 முதல் 18 வயதான சிறுவர்களுக்கு முதல் கட்டமாக கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது 
 
மற்ற தடுப்பூசிகள் பெரியவர்களுக்கே இன்னும் பெருவாரியாக செலுத்தாததால் மற்ற தடுப்பூசி சிறுவர்களுக்கு போடப்படாது என்றும் இப்போதைக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்