இல்லம் தேடி கல்வி திட்டம்! – தன்னார்வலர்களை தேர்வு செய்ய வழிமுறைகள்!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (15:41 IST)
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு தன்னார்வலர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்கள் கற்றல் இடைநிற்றலை தவிர்க்க இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இந்த திட்டத்திற்காக தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இந்நிலையில் தன்னார்வலர்களை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. அதன்படி பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கல்வி சான்றிதழ்களை சரிபார்த்த பிறகே தேர்வு செய்ய வேண்டும். தன்னார்வலர்களுக்கு குழந்தைகளை கையாளும் திறன் உள்ளதா என சோதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்