இந்நிலையில் இன்று மக்களை தேடி மருத்துவம் குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலமாக இதுவரை 34.57 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார். மேலும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் அதற்கென தனி ஆய்வு மையம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.