ஸ்டெர்லைட் போராட்டம்; அரசியல் தலைவர்கள் மீதான வழக்கு வாபஸ்! – தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 26 மே 2021 (12:51 IST)
ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான வழக்குகளில் உள்ள அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டம், அதை தொடர்ந்த துப்பாக்கி சூடு பலி சம்பவம் குறித்த விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிபிஐ வசம் உள்ள வழக்குகள் தவிர்த்த வழக்குகளில் இருந்த சாமானிய மக்களை வழக்கிலிருந்து விடுவித்து சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது ஸ்டெர்லைட் வழக்கில் சம்பந்தபட்ட அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரையின்படி சிபிஐ வழக்குகளை தவிர்த்த 38 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 13 அரசியல் தலைவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்