தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி, மருந்து, மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஊரடங்கு குறித்து பேசியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ”தமிழகத்தில் ஊரடங்கிற்கு பிறகு கொரோனா பரவல் குறைந்திருக்கிறது. திமுக ஆட்சியமைத்ததிலிருந்து தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துதல் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதி தட்டுப்பாடு இல்லாமல் உள்ளது. தேவைப்பட்டால் முழு ஊரடங்கை நீட்டிக்க சட்டமன்ற குழு ஆலோசனை அளித்துள்ளது. தேவைப்பட்டால் முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.