பரந்தூர் விமானநிலையம் அமைக்க சர்வதேச ஒப்பந்தம்: தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (12:29 IST)
சென்னை மீனம்பாக்கத்தில் ஏற்கனவே விமான நிலையம் இருக்கும் நிலையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது என்பதும் அந்த விமான நிலையம் பரந்தூர் அருகே அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பரந்தூர் அருகே இரண்டாவது விமான நிலையம் அமைக்க அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பொதுமக்களை சமாதானப்படுத்தி அந்த இடத்தில் விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 
 
இந்தநிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்து சர்வதேச ஒப்பந்தத்தை தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விமான போக்குவரத்து வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்துள்ளதை அடுத்து சர்வதேச நிறுவனங்கள் பரந்தூர் விமான நிலையத்தை அமைக்க முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்