கேஜிஎஃப் நிறுவனத்தின் படத்தில் ஒப்பந்தம் ஆன நயன்தாரா!

புதன், 23 நவம்பர் 2022 (16:01 IST)
நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த Hombale Films என்ற நிறுவனம் இந்திய அளவில் முன்னணி நிறுவனம் ஆகியுள்ளது. இதையடுத்து பல மொழிகளில் இருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குனர்களை தங்கள் நிறுவனத்துக்காக ஒப்பந்தம் செய்து வருகிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்