சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (12:55 IST)
சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
சிலம்பம் விளையாடும் வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தின் முற்கால கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டு விளையாடும் மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த கோரிக்கை தற்போது பரிசீலனை செய்யப்பட்டு இது குறித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரசாணையின் படி சிலம்பம் விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது
 
சட்டப்பேரவையில் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய மாநில அளவில் சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இந்த இடம் ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்