தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வந்த கனமழையால் பல மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. சென்னையில் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய ரூ.2,079 கோடி வழங்குமாறும், அதில் ரூ.550 கோடியை உடனடியாக வழங்குமாறும் அமைச்சர் டி.ஆர்.பாலு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அமைச்சர் டி.ஆர்.பாலு தமிழகத்தில் கடந்த 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை வழக்கத்தை விட 49.6 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாகவும், இதனால் 49,757 ஹெக்டேர் விவசாயம் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.