பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்: தமிழக அரசு உத்தரவு

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (06:35 IST)
பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று உள்பட ஒரு சில நோய்கள் இருப்பதால் பரோல் வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் மனு அனுப்பினார்
 
இந்த மனு பரிசீலனை செய்யப்பட்டு கடந்த மே மாதம் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு மாதமும் பரோல் காலம் முடியும்போது மீண்டும் பரோல் காலத்தை நீடிக்க வேண்டுமென அவரது தாயார் மனு அளித்திருந்தார் 
 
அதன்படி இதுவரை 5 முறை பரோல் வழங்கப்பட்ட நிலையில் இன்றுடன் முடிவடைந்தது. இதனை அடுத்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மீண்டும் பரோல் நீடிக்க மனு அனுப்பி இருந்த நிலையில் அந்த மனுவை பரிசீலனை செய்த தமிழக அரசு பேரறிவாளனுக்கு 6வது முறையாக மீண்டும் ஒரு மாதம் வரை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்