பொதுப்பணித்துறையில் புதிய மண்டலம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

திங்கள், 22 நவம்பர் 2021 (12:14 IST)
பொதுப்பணித் துறையில் புதிதாக கோவை மண்டலத்தை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
 
சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களை சீரமைத்து கோவையை தலைமையிடமாக கொண்டு பொதுப்பணித் துறையின் புதிய மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு சேலம் நாமக்கல் தர்மபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கி கோவை மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனால் பொதுப்பணித்துறையின் நீண்ட நாள் கோரிக்கையான கோவை மண்டலம் உருவாக்க வேண்டும் என்பது தற்போது தான் நிறைவேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்