ஆறுமுகச்சாமி ஆணையம் விரிவுபடுத்தப்படுகிறதா? சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்!

செவ்வாய், 23 நவம்பர் 2021 (13:17 IST)
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயார் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதியரசர் ஆறுமுகசாமி அவர்கள் கடந்த சில வருடங்களாக விசாரணை செய்து வருகிறார். இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது
 
இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்துவரும் நீதி அரசர் ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயார் என்றும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக உண்மையை மக்களுக்கு சொல்வது மட்டுமே மிக மிக முக்கியம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது
 
மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்துவரும் ஆறுச்சாமி ஆணையத்தில் மேலும் இரண்டு நீதிபதிகள் இணைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்