இன்று இந்துக்களின் கனவு நிறைவேறுகிறது! – ஓபிஎஸ் வாழ்த்து!

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (11:15 IST)
அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ள நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நீண்ட ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்து வந்த அயோத்தி விவகராம் முற்று பெற்று ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கா பணிகள் கோலகலமாய் தொடங்கியுள்ளன. இன்று நடைபெறும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வாழ்த்துகள் தெரிவித்து பதிவிட்டுள்ள தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் “இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறும் வண்ணம் வரலாற்றுச் சிறப்பு மிக்க "அயோத்தியில் இராமர் கோவில்" கட்டுவதற்கான பூமிபூஜை விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து, அடிக்கல் நாட்டவுள்ள மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்