கடந்த சில வாரங்களாக தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பெய்து வந்த நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த நிலையாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தெற்கு கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளிலும் தமிழகத்தில் மலைத்தொடர்களை ஒட்டிய பகுதிகளிலும் அடுத்த 5 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.