கோவைக்கு வந்திறங்கிய கமேண்டோ படை: சல்லடை போட்டு தேடல்!!

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (17:08 IST)
கோவைக்குள் ஊடுறுவியுள்ள பயங்கரவாதிகளை பிடிக்க தமிழக கமேண்டோ படையினர் வந்திறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு 6 லஸ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஊடுறுவி இருப்பதாக இன்று காலை உளவுத்துறை, தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 
 
பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவலை அடுத்து அந்த பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. 
 
இதனையடுத்து கோவை முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் கோவையில் ஊடுறுவிய 6 பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் மீதி 5 பயங்கரவாதிகள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் உளவுத்துறை தகவல் அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
கோவையில் ஊடுறுவியுள்ள பயங்கரவாதிகளை பிடிக்க கோவை நகரம் முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். கோவை மாநகரம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். 
 
தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்த எச்சரிக்கையை அடுத்து தமிழக கமாண்டோ படையினர் கோவைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் 10 குழுக்களாக பிரிந்து மாநகர எல்லைகளை சுற்றி வளைத்து சோதனை நடத்த உள்ளனர். 
 
மேலும், போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதால் மக்கள் கவலைப்படவோ, பயப்படவோ தேவையில்லை. இது பொதுவான எச்சரிக்கைதான் என கோவை காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்