ஐ எஸ் ஐ பயங்கரவாதிகள் ஊடுருவலா??: இந்திய எல்லைப்பகுதிகளுக்கு ”சீல்”

புதன், 21 ஆகஸ்ட் 2019 (12:14 IST)
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வந்த தகவலால் இந்திய எல்லைப்பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மிருக்கான சிறப்பு அந்தஸ்த்து சமீபத்தில் இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பழிவாங்கும் விதமாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த 4 ஐஎஸ்ஐ பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக குஜராத் போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. மேலும் அந்த பயங்கரவாதிகள் குஜராத் வழியாக ராஜஸ்தான் மாநிலத்துக்குள் செல்ல முயற்சிப்பதாகவும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ராஜஸ்தான் போலீஸருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது பயங்கரவாதிகள் குஜராத்தில் பதுங்கி இருக்கலாம் என கருதி குஜராத் போலீஸார் ஒரு பக்கம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளையில் இன்னொரு பக்கம் ராஜஸ்தானிலும் தேடி வருகின்றனர்.

பாகிஸ்தானின் எல்லை பகுதியான குஜராத் மாநிலத்தில் நுழையும் வாகனங்களை போலீஸார் சோதனை செய்து வருகின்றனர். எல்லை பகுதிகளில் உள்ள ஹோட்டல்களிலும் முக்கிய இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களின் எல்லைப்பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ராஜஸ்தான் மட்டுமல்லாது மஹாராஷ்ரா, பஞ்சாப், உத்திரபிரதேசம் ஆகிய இடங்களிலும் பயங்கரவாதிகள்  தாக்குதல் நடத்தலாம் என கருதப்படுவதால், அந்த மாநிலங்களிலும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்