தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுறுவல்: உளவுத்துறை எச்சரிக்கையால் பரபரப்பு

வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (08:42 IST)
தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
தமிழகத்தில் அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி, வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா உள்ளிட்ட மத சம்பந்தப்பட்ட திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில் இந்த விழாக்களின்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதனையடுத்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுறுவி இருப்பதாகவும் தமிழக காவல்துறைக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
 
6 பயங்கரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதால் தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை  கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இதனையடுத்து நேற்று நள்ளிரவு முதல் மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி பாதுகாப்பை பலப்படுத்தும் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
 
மேலும் இலங்கையில் இருந்து கடல்வழியாக பயங்கரவாதிகள் ஊடுறுவலை தடுக்க கடலோரங்களிலும் பாதுகாப்பு பணிகள் அதிகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்