இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு 6 லஸ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஊடுறுவி இருப்பதாக இன்று காலை உளவுத்துறை, தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்று இரவு முழுவதும் தமிழகத்தின் பல பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்
மேலும் கோவையில் ஊடுறுவிய 6 பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் மீதி 5 பயங்கரவாதிகள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் உளவுத்துறை தகவல் அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கோவையில் ஊடுறுவியுள்ள பயங்கரவாதிகளை பிடிக்க கோவை நகரம் முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடி வருவதால் இன்னும் சிலமணி நேரங்களில் அவர்கள் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது