வள்ளுவரை அவமதிப்பதா? டிவிட்டரில் பொங்கிய பாஜக!

Webdunia
திங்கள், 4 நவம்பர் 2019 (18:21 IST)
திருவள்ளுவர் சிலையை அவமரியாதை செய்த கோழைகளை அரடு இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும் என பாஜக டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 
 
தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சாணியை பூசிவிட்டு சென்றனர். இந்த விவகாரம் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்த நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். 
 
இந்நிலையில் தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்,
குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு 
நின்றன்னார் மாய்வர் நிலத்து
 
யுகங்கள் கடந்து வாழும் வள்ளுவருக்கு தீங்கிழைத்து ஆதாயம் தேடுவோர், எப்பெரும் மனிதராய் இருந்தாலும் குடியோடு அழிவர் என குறிப்பிட்டு. 
 
திருவள்ளுவர் சிலையை அவமரியாதை செய்த கோழைகளை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்