படம் ரிலீஸுக்கு இருக்குல அதான் இந்த ஆவேச பேச்சு? சூர்யாவை விடாத தமிழிசை!

Webdunia
திங்கள், 15 ஜூலை 2019 (13:06 IST)
நடிகர் சூர்யா புதியக் கல்விக்கொள்கையை விமர்சித்ததற்காக தமிழக பாஜக தலைவர் அவரை விடாமல் விமர்சித்து வருகிறார். 
 
சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட சூர்யா புதிய கல்விக்கொள்கை, அரசுப் பள்ளிகளின் அவலங்கள், நீட் நுழைவுத் தேர்வு உள்ளிட்டவை குறித்து தனது கருத்துக்களை முன்வைத்தார். 
 
மேலும் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் இதை எதிர்க்காவிட்டால் அவர்கள் மீது இது திணிக்கப்படும் என எச்சரிக்கைவிடுத்ததோடு இதை சரியான முறையில் கையாள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 
ஆனால், சூர்யாவின் இந்த பேச்சுக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சூர்யாவை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, கிராமப்புற ரசிகர்களுக்காக சூர்யா தனது படத்தின் டிக்கெட் விலையை குறைப்பாரா? தங்கள் படத்தின் விளம்பரத்துக்காகவும் அரசியல் நுழைவுக்காகவும் அவசரமாக கருத்து கூறுகிறார்களா? என கேட்டுள்ளார். 
அதோடு தமிழகத்தில் எல்லா கட்சிகளும் மக்கள் வளர்ச்சிக்கு எதிராக அரசியல் செய்கிறார்கள். புதியக் கல்விக்கொள்கையை சூரியக்கட்சிக்காரரும் விமர்சிக்கிறார். இப்போது சூர்யாவும் விமர்சிக்கிறார். ஒரு விஷயத்தை ஆராயமலேயே எல்லோரும் விமர்சிக்கின்றனர் என்றும் தெரிவித்தார். 
 
சூர்யா பட விளம்பரத்திற்காக இப்படி பேசுபவர் கிடையாது. அவர் நடத்தி வரும் அரக்கட்டளை மூலம் மாணவர்ள் படிப்பதால் அவர்களின் கஷ்டத்தை புரிந்துக்கொண்டு அதை வெளியே கூறி இருக்கிறார் என தமிழிசைக்கு சூர்யா ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்