விருதுநகரில் காமராஜரின் 117 ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘காமராஜர், பள்ளிக் குழந்தைகளின் பசியைப் போக்கி படிப்பைத் தந்தவர். அனைவருக்கும் கல்வியைக் கொடுக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருந்தது. புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வருவதும் அனைவருக்கும் நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்று காமராஜரின் நோக்கத்தின்படிதான்.
ஆனால் அதைப் புரிந்துகொள்ளாமல் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக என தமிழகத்தில் எல்லா கட்சிகளும் மக்கள் வளர்ச்சிக்கு எதிராக அரசியல் செய்கிறார்கள். புதியக் கல்விக்கொள்கையை சூரியக்கட்சிக்காரரும் விமர்சிக்கிறார். இப்போது சூர்யாவும் விமர்சிக்கிறார். ஒரு விஷயத்தை ஆராயமலேயே எல்லோரும் விமர்சிக்கின்றனர்.’ எனத் தெரிவித்துள்ளார்.