1000 ஆண்டு பழமையான மரத்தை பாதுகாக்க வேண்டும் – திருவண்ணாமலை மக்கள் கோரிக்கை!

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (10:00 IST)
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள 1000 ஆம் ஆண்டு பழமையான நீர்மத்தி மரத்தை சுற்றுலாத்துறை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடல்மட்டத்தில் இருந்து 4000 அடி உயரத்தில் உள்ளது திருவண்னாமலை மாவட்டத்தின் ஜவ்வாது மலை. இந்த மலையில் உள்ள மேல்பட்டு கிராமத்தில் ஆசியாவிலேயே 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகப்பெரிய நீர் மத்தி மரம் அமைந்துள்ளது. நீர்மத்தி மரம் வேர்களின் மூலம் நீரை உறிஞ்சி அதை கிளைகள் மூலமாக சாரல் போல தெளிக்கும் சிறப்பைக் கொண்டது. கிட்டதட்ட இயற்கையாக அமைந்த குளிர்சாதனப் பெட்டி போல. அதுபோல இந்த மரத்தின் இலைகள் மருத்துவகுணம் நிறைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த மரத்தின் வேர்கள் மரத்தினை சுற்றிலும் 800 மீட்டர் தூரம் படர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த மரத்தை பாதுகாக்க சுற்றுலாத்துறை முனைப்புக் காட்டவேண்டும் என ஜவ்வாது மலை மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்த மரத்தின் வரலாறு மற்றும் பெருமைகள் குறித்து கல்வெட்டு அமைக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்