கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்னாள் அமைச்சர்: அதிர்ச்சி தகவல்

வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (07:41 IST)
கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்னாள் அமைச்சர்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அண்டை மாநிலமான புதுவையிலும் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் புதுவை முதல்வர் நாராயணசாமி ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் முழு ஊரடங்கு என அறிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் புதுவை முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் முன்னாள் அமைச்சர் ஏழுமலைக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவர்  ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிகிறது. 
 
முன்னாள் அமைச்சர் ஏழுமலைக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் உடனே தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்நிலையில் அமைச்சர் ஏழுமலை இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ஏழுமலை கடந்த 1998 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகவும், 2001 ஆண்டில் புதுவை மாநில உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்