பழச்சாறில் மயக்க மருந்து - சிறுமியை வன்புணர்வு செய்த மூன்று பேர் !

Webdunia
சனி, 14 மார்ச் 2020 (08:42 IST)
கோப்புப் படம்

திருவாரூரில் 16 வயது மைனர் சிறுமி ஒருவரை மூன்று பேர் பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் அருகே உள்ள குன்னலூர் என்ற கிராமத்தில் கூலித் தொழிலாளிகளான கணவன் மனைவி வசித்து வந்துள்ளனர். அவர்களுடைய 16 வயது பெண் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுவதால் சிறுமி வீட்டில் அதிக நேரம் தனிமையில் இருந்துள்ளார். சிறுமியின் வீட்டுக்கு எதிரே உள்ள ஜான்சன் என்பவர் வீட்டுக்கு கார்த்திக் என்ற இளைஞரோடு அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சிறுமியைக் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் சொல்லி அவரோடு பலமுறை உறவுக் கொண்டுள்ளார் கார்த்திக். இந்த விஷயம் அறிந்த நண்பர்களான ஜான்சன் மற்றும் விஸ்வராஜ் ஆகிய இருவரும் பழச்சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை வன்புணர்வு செய்துள்ளனர். இது போல நான்கு மாதங்களாக அந்த சிறுமியை வன்புணர்வு செய்துள்ளனர்.

இதனால் சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் பெற்றோர். அவரைப் பரிசோத்தித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக சொல்லியுள்ளனர். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தி உண்மையை அறிந்து கொண்டனர். இதையடுத்து மூன்று பேரில் கார்த்திக்கை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்