விழுப்புரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை அவரது தாய் தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார். வேறு யாரும் இல்லாத அந்த சிறுமி சென்னையில் உள்ள உறவினர்கள் அடைக்கலம் அடைந்து வாழ்ந்து வருகிறார். அப்போது அந்த வீட்டுக்கு தண்ணீர் கேன் போட வரும் சதீஷ்குமார் என்பவர் அந்த சிறுமியோடு நட்பாகப் பழகியுள்ளார். அவரை நம்பி அந்த சிறுமியும் பழகியுள்ளார். இந்நிலையில் அவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி வீட்டை விட்டு அழைத்துச் சென்றுள்ளார்.
அவரை அழைத்துச் சென்று நீலாங்கரையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தான் மட்டுமில்லாமல் தனது நண்பர்களான வினோத் மற்றும் ராஜா ஆகியோருடன் சேர்ந்து இரண்டு வார காலமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் அவர்களை கண்டுபிடித்த போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.