மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் அவரது போயஸ் கார்டன் வீட்டில் மயங்கி விழுந்ததாக அப்போழுதே தகவல்கள் வந்தன.
ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் அந்த இரவு ஜெயலலிதா டெல்லி வட்டாரத்திடம் சமீபத்தில் நடத்தப்பட்ட பல்வேறு வருமான வரித்துறை சோதனை குறித்து போனில் பேசியுள்ளார். அதன் பின்னர் சசிகலாவிடம் பேசினார் ஜெயலலிதா. அப்பொழுது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வந்துள்ளது.
நன்றி: விகடன்
ஒரு கட்டத்தில் ஜெயலலிதா மயங்கி விழ அவரை சசிகலா உடனடியாக அருகில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அதன் பின்னர் இரண்டு நாட்கள் நல்ல நிலையில் இருந்த ஜெயலலிதாவுக்கு பின்னர் படிப்படியாக உடல்நிலை சரியில்லாமல் போயிருப்பதாக பிரபல தமிழ் வார இதழான விகடன் வீடியோ வடிவில் செய்தி வெளியிட்டுள்ளது.