மாநில அரசின் மொழிக் கொள்கையால் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை! - ஆளுநர் ஆர்.என்.ரவி!

Prasanth Karthick
வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (10:06 IST)

தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் இருமொழிக் கொள்கையால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ்நாடு அரசு மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் கல்வி நிதி தர முடியாது என மத்திய அமைச்சர் பேசியதை தொடர்ந்து தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக போராட்டங்களை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. மேலும் மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயற்சிகள் நடந்து வருவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தவெக விஜய், நாதக சீமான் உள்ளிட்ட பலரும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் மும்மொழிக் கொள்கை குறித்து பேசியுள்ள கவர்னர் ஆர் என் ரவி “தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டிய பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் இருமொழிக் கொள்கையால் தமிழக இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்புகளை தொடர்ந்து இழக்கின்றனர். இந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் வேறு எந்தவொரு தென்மாநில மொழிகளையும் படிக்க அனுமதி மறுப்பது நியாயமற்றது” என பேசியுள்ளார்.

 

ஏற்கனவே ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் இடையே அடிக்கடி முட்டல் மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த கருத்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்