பழைய முறைப்படி தேர்வு நடைபெறும் ! - அண்ணா பல்கலை அறிவிப்பு

Webdunia
சனி, 29 மே 2021 (15:57 IST)
முந்தைய எழுத்துத் தேர்வுகளின் போது பின்பற்றப்பட்ட அதே வடிவமைப்புதான் மறுதேர்வு வினாத்தாள் அமைப்பு இருக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான 2020 மாத நவம்பர்- டிசம்பர் தேர்வு கடந்த பிப்ரவரி – மார்ச் ஆகிய மாதங்களில் நடைபெற்றது.  இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரலில் வெளியானது.

இதில் பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்தது. எனவே அண்ணா பல்கலை மறுதேர்வு நடத்தும் என அறிவித்தது. அதில் தோல்வி அடைந்தவர்களும் எழுததலாம் எனக் கூறப்பட்டது.

இத்தேர்வு 3 மணி நேரம் நடக்கும் எனவும் முந்தைய எழுத்துத் தேர்வுகளின் போது பின்பற்றப்பட்ட அதே வடிவமைப்புதான் மறுதேர்வு வினாத்தாள் அமைப்பு இருக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


மேலும், ஏப்ரல்0 மே மாதம் செம்ஸ்டர் தேர்வும் ஆப்லைனில் நடைபெறும் எனவும், செமஸ்டர் தேர்வுக்கு மாணவர்களின் எண்களை அனைத்துக் கல்லூரி டீன்ம் முதல்வர்கள் தேர்வு கட்டுப்பாடு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும்,வரும் ஜுன் 7 ஆம் தேதிக்குள் அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்ய வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்