அடுத்த முதல்வர் ஸ்டாலின் : பாரிவேந்தர் எம்.பி ஆரூடம்

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (21:29 IST)
தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 91975 பணிகளை நிரப்புவதற்காக கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 76.19 % வாக்குகள் பதிவானது. அதையடுத்து டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் உள்ளாட்சி தேர்தலில் 77.73 வாக்குகள் பதிவானது.  
தற்போதைய நிலவரப்படி மாவட்டம் கவுன்சிலருக்கான மொத்தமுள்ள 515 இடங்களில் அதிமுக  242  இடங்களிலும், திமுக 270இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் ஒன்றிய கவுன்சிலர் மொத்தமுள்ள 5067 இடங்களில் அதிமுக 2186 இடங்களிலும்,  திமுக 2336இடங்களும் வெற்றி பெற்றுள்ளது.
 
வழக்கமாக உள்ளாட்சி தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெறும் என்ற நிலையில்,தற்போது எதிர்க்கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், பெரம்பலூர் தொகுதி எம்.பியும் திமுகவின் வெற்றி குறித்து  பிரபல கல்வியாளரும்  தொழிபதிபருமான பாரிவேந்தர் கூறியுள்ளது:
 
உள்ளாட்சி தேர்தல் வெற்றி மூலம் அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்பது நீரூபிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலைப் போலவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவின் வெற்றி தொடரும் என அரூடம் சூட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்