கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த இரண்டு நாட்களாக எண்ணப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த தேர்தலின் முடிவுகளில் பல சுவாரசியமான விஷயங்கள் வெளிவந்தன. 21 வயது, 23 வயது கல்லூரி பெண்கள் முதல் 79 வயது 82 வயது முதிய பெண்கள் வரை வெற்றி பெற்ற சுவாரசியமான சம்பவங்களும், முதன்முதலாக ஒரு திருநங்கை வெற்றி பெற்ற சம்பவமும், நடைபெற்றது
இந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் திமுக மற்றும் அதிமுக மாறி மாறி வெற்றி பெற்ற நிலையில் குமரி மாவட்டத்தில் மட்டும் சற்று வித்தியாசமாக தேர்தல் முடிவுகள் வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் பின்னுக்கு தள்ளியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது\
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகள் பின்னுக்கு தள்ளப்பட்டு மாநிலக் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் மட்டும் திராவிட கட்சிகள் பின்னுக்கு தள்ளப்பட்டு தேசியக்கட்சிகள் முதலிடம் பிடித்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது