கூலிப்படை தலைவனான மோகன் ராம்(43) கடந்த 2015 ஆண்டில் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்து விட்டு தலைமறைவாகியிருந்தான். தொடர்ந்து அவனை போலீஸார் வலை வீசி தேடி வந்த நிலையில் மும்பையில் வைத்து அவனை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவையில் மூன்று பேர் கொலை சம்பந்தமாக கூலிப்படை தலைவனான ,மோகன் ராமை போலீஸார் தேடி வந்தனர் . அவனுடன் மேலும் இரண்டு பேர் இந்தவழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனையடுத்து அவர்களுக்கு 2015 ஆம் ஆண்டில் ஜாமீன் கிடைத்ததையடுத்து ஆகஸ்ட் 26 ஆம் தேதி காரில் தஞ்சாவூருக்கு சென்று அங்கு மூன்று பேரை அவர்கள் சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.
இதில் கூலிப்படைத்தலைவன் மோகன்ராம் தலைமறைவானான். தற்போது போலீஸாரால் கைது செய்யப்பட்ட அவன் கூறியதாவது:
’தஞ்சாவூரில் செய்த கொலையை கூலிக்காக நான் செய்யவில்லை: மாறாக நட்புக்காகவே செய்தோம்,மேலும் போலீஸார் என்னை என்கவுண்டர் செய்துவிடுவார்கள் என்று பயந்துதான் தப்பி ஓடி தலைமறைவாக இருந்து வந்தேன் . போலீஸார் என்னை கண்டுபிடித்து விட்டார்கள்.’ இவ்வாறு அவன் கூறியுள்ளான்.