சொன்னதைக் கேட்டால் நல்ல வேலை, ஃபாரின் மாப்பிள்ளை – மி டூ வில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தலைவர் நாராயணன்

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (15:49 IST)
சின்மயி வெளியிட்டு வரும் பெண்களுக்கெதிரான பாலியல் அத்துமீறல் செய்த பிரபலங்களின் வரிசையில் தமிழ்நாடு பிராமனர் சங்கத்தின் தலைவர் நாராயணன் தற்போது சிக்கியுள்ளது.

சின்மயி கடந்த சில தினங்களாக பலப் பெண்களின் வாழ்க்கையில் நடந்த பாலியல் அத்துமீறல்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி மற்றும் இலங்கைக் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா உள்ளிட்டோர் பெயரும் அடிபட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது சின்மயி பெயரிட விரும்பாத பெண் ஒருவர் பிராமனர் சங்கத்தின் தலைவர் நாராயணன் என்பவர் மீது அளித்த குற்றச்சாட்டை பகிர்ந்துள்ளார். அந்த டுவிட்டில் அந்த பெண் கூறியுள்ளதாவது ‘எனது சொந்தக்கார பெண் ஒருவரோடு தமிழ்நாடு பிராமனர் சங்கத்தின் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். நாராயணன் என் பெயர், படிப்பு விவரம், வேலை போன்றவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது மேஜைக்கு அந்த பக்கமிருந்து அவரது காலால் எனது காலைத் தொட்டார். நான் அவரிடம் ’அங்கிள் உங்க கால் என் மேல படர்றது’ என்றேன். அவரோ எதேச்சையாக நடந்தது போல மன்னிப்புக் கேட்டார்.’

’அடுத்த முறை அதே பெண்ணோடு அங்கு சென்றிருந்த போது அவரை வேலை விஷயமாக வெளியே அனுப்பி விட்டு என்னோடு பேச ஆரம்பித்தார். வேலை கிடத்துவிட்டதாக என விசாரித்தார். நான் இன்னும் கிடைக்கவில்லை என பதிலளித்தேன்.  அப்போது அவர் தன்னால் எனக்கு ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை வாங்கித் தர முடியும் எனக் கூறிவிட்டு. திடீரென என்னிடம் பாலுறவு குறித்து மிகவும் கொச்சையாக பேச ஆரம்பித்தார். அதோடு மட்டுமல்லாமல் சைகையும் செய்து காண்பித்தார். அவர் சொல்வதற்கு சம்மதித்தால் எனக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாகவும் நிறைய சம்பாதிக்கலாம் எனவும் வெளிநாட்டு மாப்பிள்ளையை மணந்து கொள்ளலாம் எனவும் கூறினார். இதைக்கேட்ட நான் உடனே அங்கிருந்து வெளியேறிவிட்டேன்’

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்