தமிழக அமைச்சரவை ’கிரிமினல் கேபினேட்டாக’ உள்ளது - ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (17:44 IST)
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில்  உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்,  தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலில் மக்களிடம் வாக்கு சேகரிப்பதற்க்காக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,2016 ஆம் ஆண்டு நடக்க வேண்டிய உள்ளாட்சி மன்ற தேர்தலை 3 ஆண்டுகளாக அதிமுக அரசு தள்ளிப்போட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த தேர்தலை நடத்தாததற்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று தேர்தல் நடைபெற்றால் திமுக வென்றுவிடும், என்பதாலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வந்துவிட்டால் கொள்ளையடிக்க முடியாது என்பது இரண்டாவது காரணம் என கூறியுள்ளார்.தமிழக அமைச்சரவையே கிரிமினல் கேபினட்டாக உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்