என்னைப் பற்றி பரவும் தகவல்கள் தவறானது.. சம்மனுக்கு ஆஜரான பின் தங்கபாலு பேட்டி..!

Mahendran
செவ்வாய், 7 மே 2024 (16:56 IST)
என்னைப் பற்றி பரவும் தகவல்கள் தவறானது என்றும் சம்மனுக்கு ஆஜராகி தேவையான விளக்கத்தை அளித்துள்ளேன் என்றும் எப்போது இது சம்பந்தமாக எப்போது சம்மன் அனுப்பினாலும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் அவர் எழுதிய கடிதத்தில் தங்கபாலு மற்றும் ரூபி மனோகரன் ஆகியோர்கள் மீது குற்றம் சாட்டியிருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கபாலு, ரூபி மனோகரன் எம்எல்ஏ உள்பட 30 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பிய நிலையில் அதில் 15 பேரிடம் விசாரணை முடிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இன்று காலை தங்கபாலு காவல்துறையிடம் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த விவகாரத்தில் என்னை பற்றி பரவும் தகவல்கள் தவறானது என்றும் காவல்துறையிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன் என்றும் எப்போது விசாரணை என்றாலும் முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்