ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு.. இன்று ஆஜராகிறார் தங்கபாலு

Siva

செவ்வாய், 7 மே 2024 (10:07 IST)
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் தங்கபாலு இன்று ஆஜராகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட 30 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 15க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் மரணத்துக்கு முன் ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் தொடர்புடையவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
 
இந்த நிலையில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு சம்மன் அனுப்பிய நிலையில், இன்று நெல்லை மாவட்ட காவல்துறை முன்பு அவர் ஆஜராகிறார். அவரிடம் காவல்துறை அதிகாரிகள் முக்கிய சில கேள்விகளை கேட்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்