40 ஆயிரம் பிசிஆர் கருவிகளை வழங்கிய டாடா நிறுவனம்

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (13:14 IST)
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள 40 ஆயிரம் பிசிஆர் பரிசோதனைகளை வழங்கியுள்ளது டாடா நிறுவனம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் அதிக கொரோனா பாதிப்புகள் உள்ள மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. கொரோனா பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக மக்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்ய உதவியாக ரூ.8 கோடி மதிப்பில் 40,032 பிசிஆர் கருவிகளை தமிழகத்திற்கு அளித்துள்ளது டாடா நிறுவனம். இதன்மூலம் மக்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்வதில் முன்னேற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்