சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட வழித்தடம்.. ரூ.1817.54 கோடியில் டாடாவுடன் ஒப்பந்தம்!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (16:51 IST)
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட வழித்தடம் 5ல் ரயில் நிலையங்கள் அமைப்பதற்கு டாடா பிராஜெக்ட் நிறுவனத்துடன் ரூ.1817.54 கோடியில் ஒப்பந்தம் செய்துள்ளது.

கொளத்தூர் சந்திப்பு, சீனிவாச நகர், வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலை என 5 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளது!

 சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக் தலைமையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் அர்ஜுனன் மற்றும் டாடா நிறுவனத்தின் துணைத் தலைவர் ராமன் கபில் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.  

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்  கட்டம் 3ல், மூன்று வழித்தடங்களில் 116.1 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டுமானம் மற்றும் தடம் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் 100% நிறைவு பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்