சியாச்சின் முதல் செல்போன் டவர்.. பி.எஸ்.என்.எல் அசத்தல்..!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (16:44 IST)
உலகின் மிக உயரமான போர்க்களமாக இமயமலையில் உள்ள சியாச்சின் பனிப்பாறை கருதப்படும் நிலையில் இங்கு தற்போது பி.எஸ்.என்.எல் செல்போன் டவரை அமைத்துள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் அவ்வப்போது சண்டை போடும் பகுதிகளில் ஒன்று சியாச்சின். ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் எனும் இந்திய ராணுவப் பிரிவினர் இந்த பகுதியை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சியாச்சின் பனி மலையில் முதல் செல்போன் டவரை பி.எஸ்.என்.எல்  நிறுவியுள்ளது.,

இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் இந்த செய்தியை தனது ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளது.   ‘சியாச்சின் வாரியர்ஸ் BSNL உடன் இணைந்து, 15,500 அடிக்கு மேல் பணியாற்றிய ராணுவ வீரர்கள் மொபைல் மூலம் தொடர்பு கொள்ள, செய்தியை பரிமாறி கொள்ள இந்த டவர் உதவும்

அக்டோபர் 06-ம் தேதி, BSNL BTS என்னும் இந்த டவர் செயல்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் மற்றும் BSNL நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை மத்திய தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உள்பட பலர் பாராட்டியுள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்