டெல்லியில் ஐஏஸ் மாணவி ஸ்ரீமதி தற்கொலை

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (12:42 IST)
டெல்லியில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ஐஏஎஸ் படித்துவந்த பயிற்சி மாணவி ஸ்ரீமதி என்பவர் தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலைக் கைப்பற்றிய டெல்லி போலிஸார் உடலைப் பிரேத பரிசோதனைக்காக ஆர்.எம்.எல் மருத்துவமனையில் வைத்துள்ளனர். அவரின் பெற்றோர்ர் டெல்லி சென்றவுடன் அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகு பிரேத பரிசோதனை செய்யப்படும் எனத் தெரியவருகிறது.

வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்கள தொடர்ந்து இதுபோல தற்கொலை செய்து கொள்வது தமிழக மக்களின் மனதில் அச்சத்தையும் கவலையையும் உருவாக்கியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இதுபோல டெல்லியில் படித்து வந்த சேலத்தை சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது

விடுதியில் தனி அறை எடுத்து தங்கி வந்த மாணவி ஸ்ரீமதியின் தற்கொலைக்கானக் காரணம் குறித்து சகமாணவிகளிடம் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்